Latestஉலகம்

வலைவாசிகளை ஈர்த்த சிறுமியின் கூந்தல் அழகு!

லண்டன், செப். 4- சினிமா கதாநாயகர்கள், கதாநாயகிகள் உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்களை அதிக அளவில் பகிரும் சமூக வலைதளவாசிகள் தற்போது 5 வயது சிறுமியின் புகைப்படத்தை அதிக அளவு பகிரத் தொடங்கியுள்ளனர்.

நீளமான, அழகிய கருங்கூந்தலுடன் காட்சி அளிக்கும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமி மியா அப்லேலோவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுக் சில நிமிடங்களிலேயே லைக்ஸ்கலைக் குவித்திருக்கிறது. மியா அப்லேலோ என்ற பெயரில் இருக்கும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை தற்பொழுது 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

சிறுமியின் கூந்தல், உடை அலங்காரம் போன்றவை சமூக வலைத்தளவாசிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பலர் அவரது கூந்தல் அழகிற்கு மயங்கி அப்புகைப்படங்களை பகிர்ந்தாலும், ஒரு சிலர் சிறுமிக்கு எதற்காக தற்பொழுது இளவயது மங்கை போல் உடை அணிவித்து விடுகிறார்கள் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தையின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானதை தொடர்ந்து தற்பொழுது இந்த 5 வயது சிறுமியின் புகைப்படம் வைரலாகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker