Latestசினிமா

அபிராமியின் கணவருக்கு நடிகர் ரஜினி ஆறுதல்!

சென்னை, செப்.6- தமிழகத்தில் இளம்தாய் அபிராமி தனது சொந்தப் பிள்ளைகளுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவத்தில் குழந்தைகளை பறிகொடுத்து நிற்கும் கணவர் விஜய்யிடம் நடிகர் ரஜினிகாந்த் “எந்த ஆறுதலும் இந்தக் கொடிய நிலைமைக்கு மருந்தாகாது” என்று கூறினார்.

சென்னை, குன்றத்தூரில், கள்ளக் காதலனுக்காக தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் இரக்கமின்றி அபிராமி என்பவர் கொலை செய்தார். அது மட்டுமின்றி கணவரான விஜய்யை கொலை செய்வதற்கும் திட்டம் தீட்டியிருந்தார்.

அந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று விஜய்யை வரவழைத்து நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது ரஜினி, “மீண்டு வாருங்கள் விஜய், ஆண்டவன் எப்போதும் துணை இருப்பான்.. நாங்கள் இருக்கிறோம்” என்று கண்கலங்கிய நிலையில் தெரிவித்துள்ளார். ரஜினியிடம் விஜய்யும் தன்னைடைய மனக் கஷ்டங்களை கூறி அழுதார்.

அதன் பின், ரஜினி சந்திப்பு குறித்து விஜய் கூறுகையில், ‘நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதே போல என்னுடைய குழந்தைகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் என்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே பேசி சைகைகளை செய்து காட்டுவார்கள்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker