Latestஉலகம்

கடலுக்குள் இறங்கிய விமானம்!

லண்டன், செப்.6- பிரிட்டனில் சிறிய ரக விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக கடலுக்குள் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேள்ஸ் பகுதியிலிருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று பெம்புரோக்சையர் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானி அவசரமாக வேள்ஸ் வளைகுடா பகுதியின் கடலுக்குள் விமானத்தை தரையிறக்கினார்.

அப்போது தரையில் விமானம் மோதியதில் விமானி பலத்த காயமடைந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானத்தில் இயந்திர கோளாறுக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker