உலகம்

குறைந்தபட்ச சம்பளம்; பெருத்த ஏமாற்றம்! -கைரி சாடல்

கோலாலம்பூர், செப்டம்பர் 6- புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம், தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருப்பதை விட முதலாளிகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளது என்று ரெம்பாவ் எம்.பி.யான கைரி ஜமாலுடின் சாடினார்.

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் மாதம் 1,200 ரிங்கிட்டாவது பக்காத்தான் அரசாங்கம் வழங்கி இருக்கவேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழ் கிடைத்த முதலாவது சம்பள உயர்வாகவும் பொருத்தமானதாகவும் இது அமைந்திருக்கும் என்றார் அவர்.

ஆனால், அரசாங்கம் முதலாளிகளின் தேவைகளுக்குச் சாதகமாக செயல் பட்டிருக்கிறது என்று தம்முடைய டிவிட்டர் பதிவில் கைரி தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் அலுவலகம் அறிவித்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1,050 ரிங்கிட்டாகும். அதாவது இதுவரை வழங்கப்பட்ட 1,000 ரிங்கிட்டிலிருந்து 50 ரிங்கிட் மட்டுமே அதிகரிக்கும் வகையில் சம்பள நிர்ணயம் செய்ய்யப்பட்டுள்ளது.

முதலாளிகளுக்கும் தொழிலளர்களுக்கும் இடையே ஒரு சமநிலை பேணும் வகையில் இந்தக் குறைந்தபட்ச சம்பள நிர்ணயம் அமையவில்லை. முற்றிலும் இது பெருத்த ஏமாற்றம் என்று கைரி வர்ணித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker