Latestமலேசியா

பெண்களுக்கு பிரம்படி: கைரியின் கருத்து அம்னோவின் கருத்தல்ல! – இஸ்மாயில் சப்ரி

ஷா ஆலாம், செப்.6- திரெங்கானு மாநிலத்தில் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதற்காக அம்மாநில ஷாரியா நீதிமன்றம் இரு பெண்களுக்கு பொது மக்களின் முன்னிலையில் 6 பிரம்படிகளை தண்டனையாக விதித்து, அதனை அரங்கேற்றியது.

இஸ்லாம் மதம், மன்னிக்கும் தன்மையை கொண்டிருக்கும் மதம். அந்தப் பெண்களை தண்டிக்கும் செயல், இஸ்லாம் மதத்தை பிரதிபலிக்கவில்லை என்று முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கைரி ஜமாலுடின் கூறியிருந்தார்.

அவ்விவகாரம் தொடர்பிலான கைரியின் கருத்து, அவரின் சொந்தக் கருத்தாகும். அவரின் கருத்தை அம்னோ கட்சி ஆதரிக்கவில்லை என்று அம்னோவின் உதவித் தலைவரான டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

“அந்தத் தண்டனை குறித்து கைரி தனது சொந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்துகளுக்கும் அம்னோவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அத்தண்டனை குறித்த அம்னோவின் கருத்து, கட்சியின் தலைமைத்துவத்துடன் விவாதிக்கப் பட்ட பின்னரே, வெளியிடப் படும்” என்று இஸ்மாயில் சொன்னார்.

அது தொடர்பில் அம்னோவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, அம்னோ கட்சி அவ்விவகாரம் குறித்து எவ்வித முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

“யார் வேண்டுமானாலும் தங்களின் கருத்துகளை வெளியிடலாம். ஆனால், அவை அனைத்தும் அம்னோவின் நிலைப்பாடு என்று யாரும் கருதி விடக் கூடாது” என்று அவர் நினைவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker