Latestஇந்தியாஉலகம்

ஆண்மை பரிசோதனைக்கு தப்பித்த நித்தியானந்தா அதிரடி ஓட்டம்!

பெங்களூர், செப். 7 -நித்தியானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் நேற்று ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டு இன்று 7 ஆம் தேதி அவர் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராக மறுத்ததால் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ராம்நகர் மாவட்டம் பிடதியில் சாமியார் நித்தியானந்தா ஆசிரம் நடத்தி வருகிறார். அவர் மீது பெண் சீடர் ஆரத்திராவை பாலியல் பலாத்காரம் செய்தது, ஆசிரம பக்தை கொலைவழக்கு, போதைப்பொருட்கள் சேமிப்பு உட்பட பல்வேறு வழக்குகள் பிடதி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலிசார் முடிவு செய்த போது மருத்துவ சான்றிதழ் எடுக்க மறுத்தார் நித்தியானந்தா.
மருத்துவ சான்றிதழ் எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. பின்னர் 2017 இல் ஒரு பொய்யான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நித்தியானந்தா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை நகர் உயர்நீதி மன்றம் அதிரடி

உத்தரவை பிறப்பித்தது. ஆனாலும் நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை
கைது செய்ய போலீசார் தேடிவருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker