Latestமலேசியா

காதலி படத்தை ஒழுக்கமற்ற பெண் போல மாற்றியமைத்த ஆடவனுக்கு சிறை

கோலாலம்பூர்,செப்.7- காதலியின் படத்தை ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் பெண் போல மாற்றியமைத்த ஆடவனுக்கு 5,000 ரிங்கிட் அபராதத்தையும் 6 மாத சிறைத் தண்டனையும் அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிபதி விதித்து தீர்ப்பளித்தது.

தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் முகமட் ஒமார் அலீப் ரோஸ்லி என்ற அந்த ஆடவனுக்கு மாஜிஸ்திரேட் முகமட் பிர்டாவுஸ் சடினா அலி அத்தண்டனையை விதித்தார்.

36 வயது காதலியின் படத்தை ஒழுக்கமற்ற பெண்ணை போல மாற்றி அப்படத்தை வாட்செப்பில் அப்பெண்ணுக்கு அனுப்பியிருக்கிறான் ஒமார்.

இவ்வாண்டு ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் ஒமார் அக்குற்றத்தை புரிந்திருக்கிறான்.
உண்மையில், குற்றவியல் சட்டம் 509-இன்படி இந்த குற்றத்திற்கு அதிகபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இச்சம்பவம் நடந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் தனது காதலி தன் மீது போலிசில் புகார் அளிப்பார் என தான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லையென ஒமார் நீதிமன்றத்தில் கூறினான். ஒமாருக்கு வழங்கப்பட்ட தண்டனை அவனுக்கு ஒரு பாடமாக இருக்கும் என மாஜிஸ்திரேட் முகமட் பிர்டாவுஸ் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker