Latestமலேசியா

குறைந்தபட்ச சம்பளத்தை அதிகபடியாக உயர்த்த முடியாது- மகாதீர்

சிலாங்கூர்,செப்.7- நாட்டின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டே தனியார் துறை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 1,050 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டது என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார். பலரும் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப குறைந்தபட்ச சம்பளத்தை 1,800 ரிங்கிட்டாகவோ, 1,500 ரிங்கிட்டாகவோ உயர்த்துவது சாத்தியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் கடனையும், அதற்கான வட்டியையும் கட்டுவதற்கே பணம் போதாமல் இருக்கிறது. இந்நிலையில், குறைந்தபட்ச சம்பளத்தை அதிகளவில் உயர்த்துவது சிரமம் என்று பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,050 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத் திட்டம் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி அமலுக்கு வருகிறது. அரசாங்கத்தின் அம்முடிவை பலரும் எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker