Latestமலேசியா

பிரபல காமெடி நடிகர் ‘ஜைபோ’ வுக்கு புற்றுநோய்!

கோலாலம்பூர், செப்.7- மலாய்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகரான நடித்து எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவரான ‘ஜைபோ’ என்றழைக்கப்படும் ஜைனல் அரிப்பின் அதுல் ஹமிட், உணவுக் குழாய் தொடர்பான புற்றுநோய்க்கு இலக்காகி உள்ளார் என்று உள்நாட்டு தினசரி ஒன்று தெரிவித்துள்ளது.

சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜைபோவுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் புற்றுநோய் 4ஆவது கட்ட நிலையில் இருப்பதாக அந்தச் செய்தி கூறியது.

‘ஸ்பானர் ஜெயா’ என்ற படத்தில் நடித்து புகழ்பெற்ற அவர், விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் பின்னர் 12ஆம் தேதி தேசிய புற்றுநோய்க் கழகத்தில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் தெரிய வந்துள்ளது.

“இப்போது நான் தேறிவருகிறேன். எனக்கு இரத்த அழுத்தமும் கொலஸ்ட்ரோல் பிரச்னையும் தான் இருந்து வந்தது. ஆனால், நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, எனக்கு 4ஆவது கட்ட உணவுக்குழாய் புற்றுநோய் இருக்கும் என்று” என ஜைபோ கூறினார்.

“இந்தப் புற்றுநோய், என்னுடைய வயிறு, நுரையீரல் மற்றும் விலா பகுதிகளிலும் பரவி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார் அவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தாம் நடிப்பதில்லை என்பதால் தமக்கு மருத்துவச் செலவுக்கான வருமானம் எதுவும் இல்லை. எனவே பொது மக்களின் உதவி இருந்தால் அது தம்முடைய சுமையைக் குறைக்கும் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker