Latestஇந்தியா

அருவருப்பாக இல்லையா! உதயநிதியைப் பார்த்து குமுறிய திமுக தொண்டர்!

சென்னை, செப். 8- திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதியின் புகைப்படம் இருப்பதை பார்த்துவிட்டு தொண்டர் ஒருவர் அவரிடம் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து தலைமை பொறுப்புக்கு வந்த மு.க.ஸ்டாலின் கட்சியின் உயர் மட்டத்தில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

கனிமொழிக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.  இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதிக்கு திமுகாவில் சமீப காலமாக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆம் தேதி தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் கருணாநிதி,ஸ்டாலின் புகைப்படங்கள் இருந்தது. அதனுடன் உதயநிதியின் புகைப்படமும் இருந்தது  குறித்த புகைப்படத்தை பார்த்த திமுக தொண்டர் ஒருவர் டுவிட்டரில் இது குறித்து, உதயநிதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் “மிஸ்டர் உதயநிதி ஒரு திமுக தொண்டனாய் இதுவெல்லாம் எவ்வளவு அருவருப்பாய் இருக்கு தெரியுமா? உங்களுக்கு தோணலையா முன்னணி தலைவர்கள் மேடையில உங்க போட்டோ இடம் பெற உங்கள் தகுதி என்ன” என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு உதயநிதி கொஞ்சமும் யோசிக்காமல் பதில் அளித்துள்ளார். “தவறு மீண்டும் நடக்காது” என பதிவிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker