Latestஉலகம்

இளவரசர் வில்லியம்- கேத் கூட ஒருமுறை பிரிந்திருக்கிறார்கள் – வெளிவராத உண்மை

லண்டன், செப். 8- பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேத் தம்பதியினர் கூட ஒருமுறை பிரிந்திருக்கிறார்கள் என்ற உண்மை இன்றும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தக் காலகட்டத்தில் சோகத்தை மனதில் மறைத்துக் கொண்டு கடமைக்காக பொதுநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கேத்தின் புகைப்படங்களை தற்போது வெளியாக்கியுள்ளனர்.
ஐந்து வருடக் காதலுக்குப் பின் சரியாக புரிந்து கொள்ளாமலும் உணர்வை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் இருவரும் பிரிந்துப் போனார்கள். அந்தப் பிரிவு சில மாதங்களுக்குத் தொடர்ந்தது  திருமணம் செய்து கொள்ளலாம் என கேத் முடிவு செய்த நேரத்தில்தான், “தன் பெற்றோரைப் போல் அவசரப்பட்டு திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்த வில்லியமோ ஒரு ராணுவ அதிகாரியாக முடிவெடுத்தார்.
சொல்லப்போனால் இந்தப் பிரிவை அவர் கொண்டாடியதாகக் கூட செய்தி வெளியானது. தன் நண்பர்களுக்கு விருந்து கொடுத்த வில்லியம் ஒரு வழியாக நான் சுதந்திர மனிதனாகி விட்டேன் என்று கத்தினாராம்.
அடுத்த நாள் அவர்களது பிரிவு செய்தி வெளியானது. ஆனால் அதற்குள் கேத் தன் தாயுடன் அயர்லாந்துக்கு பறந்து விட்டார்.  பொது நிகழ்ச்சிகளில் கனத்த மனத்தை மறைத்துக் கொண்டு செயற்கையாக அவர்கள் சிரிக்கும் புகைப்படங்கள் பிரபல பத்திரிகை ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. ஆனால் அதற்குப் பின் என்ன நடந்தது என்று அனைவரும் அறிந்ததே.

2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  பின்னர் ஒரு பேட்டி ஒன்றில் “நாங்கள் அந்த நேரத்தில் மிகவும் இளமையானவர்களாக இருந்தோம். ஆனால் அந்த தற்காலிக பிரிவும் நல்லதாகவே முடிந்தது என இளவரசர் வில்லியம்- கேத்தும் தெரிவித்திருந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker