Latestஉலகம்வாழ்க்கை

சுவிட்சர்லாந்து இளைஞர்களில் பத்தில் ஒருவருக்கு பால்வினை நோய்: அதிர்ச்சி தகவல்

பேர்ன், செப்.8- சுவிட்சர்லாந்தில் 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பத்தில் ஒருவருக்கு பால்வினை நோய் இருப்பதாக முக்கிய இரு மருத்துவ பல்கலைக்கழகங்கள் மேற்கண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசன்னே மற்றும் சூரிச் நகரங்களில் செயல்பட்டு வரும் இரு முக்கிய மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
24 வயது முதல் 26 வயது வரையான சுமார் 7,142 இளைஞர்களிடம் முக்கியமான கேள்வி ஒன்றை இந்த ஆய்வின் மூலம் முன்வைக்கப்பட்டது. சுவீஸ் இளைஞர்களிடத்தில் டேட்டிங் செயலிகள், ஆபாச உரையாடல்கள் என சமகால தொழில்நுட்பம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறியவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் சராசரியாக பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் முதல் பாலியல் உறவை 17 வயதுக்குள் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஆய்வில் கருத்தடை மாத்திரைகளையும் ஆணுறைகளையும் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் இளைஞர்கள் பெரும்பாலோனர் பாதுகாப்பான முறையை கையாண்டாலும் பத்தில் ஒருவருக்கு பால்வினை நோய் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி முதன் முறையாக பாலியல் உறவு வைத்துக்கொண்ட சுமார் 45% இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் தங்களை எச்ஐவி சோதனைக்கும் உட்படுத்தியுள்ளனர் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
Kayalvili • 1 min

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker