Latestஇந்தியா

ராகுல்காந்தி இந்தியாவின் மிகப் பெரிய கோமாளி..!

ஐதராபாத், செப்.8- “காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல்காந்தி தான் இந்தியாவின் மிகப்பெரிய கோமாளி” என மிக காட்டமாக விமர்சித்துள்ளார் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகராவ் ஆட்சிக்காலம் முழுமையாக முடிவடைவதற்கு முன்னதாகவே தனது ஆட்சியை கலைப்பதாக அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி முடிவெடுத்த சந்திரசேகராவ், அம்மாநில ஆளுனரிடமும் ஆட்சியை கலைப்பதற்கான மனுவினை அளித்தன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,அடுத்த சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்
அப்போது காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுலை மிக காட்டமாக சாடினார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை தீர்மானத்தின் போது ராகுல்காந்தி  பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் கட்டி பிடித்ததையும்- கண்ணடித்ததையும் இந்த நாடே பார்த்தது. எல்லோருக்கும் தெரியும் ராகுல் காந்தி ஒரு கோமாளி என்று.  டெல்லி காங்கிரசின் சட்ட வாரிசான ராகுல்காந்தி காங்கிரஸ் மரபை கொண்டவர் எனவே மக்கள் காங்கிரஸையும் ராகுலை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என ராகுலை விமர்ச்சித்தார் சந்திரசேகராவ்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker