Latestஉலகம்

கோத்தாவா..! பஷிலா.. இரு வாரத்திற்குள் தீர்வு:-வாசுதேவ நாணயக்கார

கொழும்பு, செப்.9- பொது எதிரணியின் அதிபர் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவா… பஷில் ராஜபக்சவா அல்லது வேறு யாருமா என்பது இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அதிபர் தேர்தலை பொது எதிரணிக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்களின் விருப்பினை பெறக்கூடிய ஒருவரை அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்.

ஆகவே அதிபர் தேர்தலுக்கான பொது வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம் பெறவுள்ளது.
எனவே எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிபர் வேட்பாளரின் பெயரை அறிவிப்போம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker