Latestஇந்தியாஉலகம்

நடிகை சோனாலி பிந்த்ரே மரணமா…! சர்ச்சையான எம்.எல்.ஏவின் பதிவு!

புதுடில்லி, செப்.9- நடிகை சோனாலி பிந்த்ரே காலமாகிவிட்டார் என இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏ ராம் கதமின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக நினைத்து “புகழ் பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலாமானர். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எம்.எல்.ஏ ராம் கதம் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இச்செய்தி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தன் பதிவை திருத்தி அவர், “நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவரின் ஆரோக்கியமான உடல் நிலையை பெறவும் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

உயிரோடு இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏவுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker