Latestமலேசியா

பிரதமர் எனக்கு வாக்கு தந்து விட்டார்! யாரும் என்னிடம் போட்டிக்கு வராதீர்- அன்வார்

கூச்சிங்,செப்.9- நேரம் வந்ததும் பிரதமர் துன் மகாதீர் தன்னிடம் பொறுப்பை ஒப்படைப்பார். அதுவரை பொறுமையுடன் காத்திருக்குமாறு பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார். அதற்குள், யாரும் அந்த பதவிக்கு போட்டியாக வந்து விடாதீர்கள் என அவர் சொன்னார்.

இதனிடையே, தான் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சீக்கிரமே நாடாளுமன்றத்தில் அமர்வதற்காக ஒரு நாடாளுமன்றத் தொகுதி காலியாகவுள்ளது என்பதை அவர் மறுக்கவில்லை.

இரண்டு மூன்று தொகுதிகள் உள்ளன. ஆனால், தான் எத்தொகுதியில் களமிறங்கவிருப்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் முடிவாகியதும் அறிவிக்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

பிகேஆர் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியின்றி வெற்றி பெற்ற அன்வார், தமது துணைவியார் வான் அஸிஸாவின் பாண்டான் தொகுதியில் அல்லது மகள் நூருல் இஸ்ஸாவின் பெர்மாத்தாங் பாவோ தொகுதியில் இடைத்தேர்தலில் நிற்பார் என ஏற்கெனவே கூறப்பட்டதை அவர் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker