Latestஇந்தியாஉலகம்சினிமா

முகத்தில் அசிட் அடித்துவிடுவேன்:- பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!

சென்னை, செப்.10- சாம் ஆண்டன் இயக்கத்தில் ஆதர்வா -ஹன்சிகா இணைந்து நடிக்கும் திரைப்படம் 100 . இப்படத்தினை ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ளார்.

இதில் ஹன்சிகாவும் அதர்வாவும் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் -ஹன்சிகாவுக்கு சம்பளமாக 75 லட்சம் பேசப்பட்டு அதில் முன் பணமாக 35 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.
மீதி பணத்தை படம் முடித்த பின் கொடுப்பதாக கூறி இருந்த நிலையில் பாதி படத்தை நடித்து முடித்த பின் ஹன்சிகா மீதி சம்பளத்தை கேட்டுள்ளார். அப்போது 40 லட்சத்திற்கு 5 காசோலைகள் கொடுத்துள்ளார் மகேஷ் கோவிந்தராஜ்.

மூன்று நாள்கள் ஷூட்டிங் இருந்த நிலையில் மகேஷ் கொடுத்த காசோலை செல்லாது என தெரிய வந்தது. வரவேண்டிய பாக்கியை கொடுத்தால் தான் படப்படிப்புக்கு வருவேன் என கூறியுள்ளார் ஹன்சிகா. மேலும் நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் கோபமான மகேஷ் நான் நினைத்தால்,” தமிழ் சினிமாவிலேயே நீ நடிக்க முடியாது. மூஞ்சில் அசிட் அடித்து விடுவேன் என்றும் கொலை செய்து விடுவேன்” என்று -ஹன்சிகாவை  போனில் மிரட்டியுள்ளார். தற்போது இச்செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker