Latestஉலகம்

ஸ்ரீதேவிக்கு சிலை: சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை முடிவு

பேர்ன்,செப். 10- மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை அமைச்சு சிலை அமைக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து இந்திய சினிமாவில் முதலிட சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் 22ஆம் தேதி துபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலுக்கு இந்திய சினிமாவின் பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் போலிவுட்டில் அவர் நடித்த போது யாஷ்சோப்ரா இயக்கத்தில் நடித்த சாந்தினி, லம்ஹே போன்ற இந்தி திரைப்படங்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டன. இதனால் அந்நாட்டிலும் ஸ்ரீதேவி புகழடைந்தார்.

தற்போது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடிகை ஸ்ரீதேவியின் திருவருவம் சிலையாக அமைக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுற்றுலாத் துறையும் – இந்தி மற்றும் தமிழ் திரைப்படத் துறையும் அந்நாட்டில் வளரும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை எதிர்பார்க்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker