Latestஉலகம்

அமெரிக்காவின் ஆறாத சோகம்: இன்று இரட்டை கோபுர தகர்ப்பு தினம்

நியூயார்க், செப். 11- உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா- நியூயார்க்கிலுள்ள உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு விமானங்களை கடத்திய அல்கைய்டா பயங்கரவாதிகள் 19 பேர், 2001 ஆம் ஆண்டு செப்.11-ஆம் தேதி உலக வர்த்தக மைய இரட்டை கோபுரத்தின் மீது மோதினர். மோதிய இரண்டு மணி நேரத்துக்குள் மொத்த கட்டடமும் தரைமட்டமானது. இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும் வணிக மைய கட்டடத்தில் இருந்த 2600 பேரும் பலியாகினர்.

மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் எனும் இடத்தில் ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது மோதச் செய்தனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும் பெண்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் பலியாகினர். கடத்தப்பட்ட நான்காவது விமானத்தில் பயணிகள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே சண்டை நடந்தது. முடிவில் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் 40 பேர் பலியாகினர்.

இச்சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உருக்குலைந்த இரட்டை கோபுர இடிபாடுகள் 2002ஆம் ஆண்டு மே மாதம் முற்றிலும் அகற்றப்பட்டது.

இத்தாக்குதலுக்கு ஒசாமா பின் லாடனின் அல்கைய்டா பயங்கவாத அமைப்பு பொறுப்பேற்றது. பல ஆண்டுகள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் 2011ஆம் ஆண்டு மே 2 இல் ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் சுட்டுக் கொல்லப்பட்டர். இத்தாக்குதலுக்காக பல ஆயிரம் கோடிகளை செலவிட்டது அமெரிக்கா.

அதன்பின் சேதமடைந்த பெண்டகன் ராணுவ தலைமையகம் ஓராண்டுக்குள் சரி செய்யப்பட்டது. அதே போல இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் நினைவிடம் மற்றும் மியூசியம் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் இரண்டு உலக வர்த்தக மைய கோபுரமும் கட்டி திறக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்து 17 ஆண்டுகள் கடந்தும் பலியானவர்கள் 1,100 பேரின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker