Latestஉலகம்

அமெரிக்கா வரி விதிப்பை மேலும் அதிகரித்தால் தக்க பதிலடி தரப்படும்: சீனா உறுதி!

பெய்ஜிங், செப்.11- சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா வரி விகிதங்களை மேலும் அதிகரித்தால் அதற்கான தக்க பதிலடி கிடைக்கும் என சீனா உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கெங் ஷூ வாங் கூறியதாவது:- சீன இறக்குமதி பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன இறக்குமதிப் பொருள்கள் மீது புதிய வரிகளை விதிக்க தயாராகும் பட்சத்தில் சீனாவும் தனது உரிமையை பாதுகாக்கக் கொள்ள தக்க பதிலடி நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபடும் என்றார்.

தொழில்நுட்ப கொள்கையில் ஏற்பட்ட போட்டி காரணமாக சீனா- அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் 5,ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25% வரியை விதித்தன. இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம் மேலும் 20,000 கோடி டாலர் மதிப்பிலான வரி விதிக்க தயாராகி வருகிறது.

இதனிடையே,டிரம்ப் கடந்த வாரம் கூறுகையில், கூடுதலாக 26,700 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருள்களுக்கு வரிகளை விதிக்க பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே சீனா இக்கருத்தை தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker