Latestமலேசியா

சவூதி அரசக் குடும்பத்தின் ரிம.304.5 மில்லியன் நன்கொடை; ஆதாரங்களை பகிர்ந்தார் நஜிப்!

கோலாலம்பூர், செப்.11- கடந்த 2011-ஆம் ஆண்டில், சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தினர் தனக்கு 100 மில்லியன் (அமெரிக்க டாலர்) நன்கொடையை வழங்கினர் என்பது தொடர்பிலான ஆவணங்களை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல்-சவூத், அந்த ரிம.304.5 மில்லியன் நன்கொடையை, நஜிப்பிற்கு பிரத்யேகமாக வழங்கியுள்ளார் என்பது தொடர்பிலான கடிதம் ஒன்றையும் நஜிப் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.

ஜாலான் லங்காக் டூத்தாவிலுள்ள நஜிப்பின் வீட்டின் விலாசத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், இஸ்லாமிய உலகத்திற்கு நஜிப் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அந்த நன்கொடை அவருக்கு வழங்கப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

“கடந்த சில ஆண்டுகளாக நாம் தோழமையை பாராட்டி வருகிறோம். நவீன இஸ்லாமிய நாட்டின் தலைவரான நீங்கள், இஸ்லாமிய உலகத்தை மேம்படுத்த கூறும் ஆலோசனைகள் எங்கள் அனைவருக்கும் பேருதவியாக அமைந்துள்ளது. அதனை அங்கீகரிக்கும் வகையில், இந்த அ.டாலர் 100 மில்லியனை நாங்கள் உங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறோம்.

“இந்த நன்கொடையை நீங்கள் இஸ்லாமிய மதத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக உபயோகிப்பீர் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இஸ்லாத்தை நீங்கள் உலகளவில் வளர்ச்சியடைய செய்வீர் என்ற நம்பிக்கையில் இப்பணத்தை நான் உங்களுக்கு பரிசாக வழங்குகிறேன்” என்று அக்கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. 

“கடந்த 2010-ஆம் ஆண்டில், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் மத்தியில் சில பிரச்சனைகள் எழுந்ததால், சவூதி அரேபியாவின் அரசக் குடும்பத்தினர் அந்த நன்கொடையை வழங்கினர்.

“அந்தக் காலக்கட்டத்தில் பிரச்சனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், சவூதி அரேபியாவின் அரசர் (மறைந்த) அப்துல்லா, அந்த நன்கொடைகளை முஸ்லீம் நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கினார்” என்று நஜிப் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட நன்கொடை பணத்தை, தாம் தேசிய முன்னணியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தியதாகவும், ஜொகூர் மாநில அம்னோ கட்சி, வேன்களை வாங்குவதற்கு தாம் பங்களித்ததாகவும் அவர் மேலும் கூறினார். 

இதேப் போன்று, சவூதி அரேபியாவின் இளவரசர் தமக்கு பல நன்கொடைகளை வழங்கியுள்ளார் என்றும், அதற்கான கடித ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என்றும் நஜிப் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker