Latestஉலகம்விளையாட்டு

செரினாவின் கோபத்திற்கு இது தான் காரணமா?

வாஷிங்டன், செப்.11- அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் விதிகளை மீறியதற்காக செரினா வில்லியம்ஸூக்கு அந்நாட்டின் டென்னிஸ் கழகம் 1700 டாலர் அபராதம் விதித்துள்ளது.

சனிக்கிழமை நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இரண்டாம் செட்டின் தொடக்கத்தில் பயிற்சியாளரிடம் இருந்து அறிவுரைகளை பெற்றார் செரீனா வில்லியம்ஸ்.
அது விதிமீறல் என நடுவர் செர்ஜியோ ரமோஸ் எச்சரித்தார். தொடர்ந்து தனக்கு எதிராக புள்ளிகள் வழங்கியதால் நடுவர் செர்ஜியோ ரமோஸ் மீது ஆத்திரமடைந்த செரினா வில்லியம்ஸ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு திருடன் மற்றும் பொய்யர் என்று திட்டினார்.

இதற்கு மன்னிப்பு கோருமாறு நடுவர் வலியுறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த செரினா தனது நடத்தையை நடுவர் தவறாக சித்தரிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.

திடீரென தனது டென்னிஸ் மட்டையை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். பயிற்சியாளரிடம் இருந்து அறிவுரை பெற்றது. தவறான வார்த்தைகளை பயன்படுத்தியது டென்னிஸ் மட்டையை ஓங்கி அடித்தது ஆகிய மூன்று விதி மீறல்களுக்காக செரினாவுக்கு அமெரிக்கா டென்னிஸ் கழகம் 1700 டாலர் அபராதம் விதித்துள்ளது.

குழந்தைப்பேறுக்கு பின் அவர் மன அழுத்தம் காரணமாகவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அதீத கோப நிலைக்கு ஆளாகுவதாக கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker