Latestஇந்தியாசினிமா

நடிகை சோனாலி உடல் நிலை குறித்த வதந்தி பரப்ப வேண்டாம்: கணவர் தாழ்ந்த கோரிக்கை

மும்பை, செப்.11- சோனாலி பிந்த்ரேவின் உடல்நிலை குறித்து வதந்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம் என்று அவரது கணவர் கோரிக்கை வைத்துள்ளார். போலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்த சோனாலி பிந்த்ரே (வயது 43) தமிழில் கண்ணோடு காண்பதெல்லாம்,காதலர் தினம் ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார்.                                                                                                                                                                                                                                 2002ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குனருமான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்ட இவர் நடிப்பிலிருந்து விலகி கொண்டார். அதன் பின் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் தனது டுவிட்டரில் சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார் அவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக அப்பதிவை திருத்தி எழுதியிருந்தார்.  இந்நிலையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று சோனாலியின் கணவர் கோரிக்கை வைத்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் “தயவு செய்து சமூக வலைத்தளத்தை அதிக பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  தேவையின்றி வதந்திகளை பரப்பாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களை மேலும் காயப்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker