Latestஇந்தியா

பிரபல சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்

மைசூர், செப்.11- மைசூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யஹம்ச பாரதி சுவாமி தன்னை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய  முயன்றதாக பெண் ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி தன்னைக் கடத்த முயன்றதாகவும்- கொல்ல முயன்றதாகவும் அப்பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

சாமியாரின் செயலுக்கு தனது கணவரும் உடந்தை என்றும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மைசூர் ராம் மந்திர் மண்டபத்தில்,சதுர்மாஸ்ய விரதம் அனுசரிப்பதற்காக சாமியார் அங்கே தங்கியுள்ளார். செப்டம்பர் 24  ஆம்தேதி இந்த விரதம் முடிவடைகிறது.

இந்நிலையில் தான் இச்சாமியார் மீது பலாத்கார புகார் கிளம்பியுள்ளது. இவர் மீது புகார் கொடுத்த பெண் ராமகிருஷ்ணா  நகரில் வசித்து வருகிறார். அவர் தனது புகாரில் எனக்கும் எனது கணவருக்கும் திருமணமாகி 15 வருடமாகிறது. எனது கணவர் இந்தச் சாமியாரின்  தீவிர பக்தர். என்னையும் அவரிடம் சென்று ஆசி பெறுமாறு அடிக்கடி கூறி வந்தார். நமக்குள்ள இருக்கும் கடன் பிரச்சனை சாமி தீர்த்து வைப்பார். நீ போய் பார் என்று கூறினார்.ஆனால் பார்க்க முடியாது என்றேன்.

இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 1 மணி காலையில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு வெளியே  சென்றிருந்த கணவர் தான் வந்து விட்டார் என்று நினைத்து கதவைத் திறந்தேன். ஆனால் அங்கே சாமியார் நின்றிருந்தார்.  எனது கணவரும் கூட இருந்தார்.
சாமியார் வேகமாக வீட்டுக்குள் புகுந்தவர் என்னைத் தள்ளி விட்டார். என்னை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். எனது  அந்தரங்கத்திலும் பலமாக தாக்கினார். அசிங்கமாக திட்டினார். கோயிலுக்கு வந்து என்னை பார்க்க முடியாதோ என்று  கோபமாக கேட்டார். என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். பின்னர் அவரது வாகனத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றினார். அவரது மடியில் அமர வைத்தார். 3 நாட்களில் வந்து என்னைப் பார்க்க வேண்டும் இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்றார்.                                                                                                                                                                                                                                                                                  இந்த வழக்கில் பெண்ணின் கணவர் முதல் குற்றவாளியாகவும் -சாமியார் இரண்டாவது குற்றவாளியாகவும்  சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மைசூரை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker