Latestஉலகம்

பிரான்ஸ் ஹோட்டலில் சவுதி இளவரசியின் விலையுயர்ந்த நகைகள் கொள்ளை!

பாரிஸ்.செப்.11- பிரான்சில், சவுதி இளவரசி தங்கியிருந்த ஹோட்டலில் அவரின் பலகோடி மதிப்பிலான நகைகள் கொள்ளயடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள ஐந்து நட்சத்திர ரிட்ஸ் ஹோட்டலில் சவுதி இளவரசி தங்கியுள்ளார். ஆனால் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

அவரிடம் சுமார் 700,000 யூரோ மதிப்பு கொண்ட நகைகள் கொள்ளயடைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் பிற்பகலில் நடந்தேறியது என கூறப்படுகிறது.. இக்கொள்ளை குறித்து விசாரணை போலீசார் மேற்கொண்டு வருவதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இதே போன்றதொரு சம்பவம் இந்த ஹோட்டலில் நடந்தேறியது.  பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளைக் கும்பல் ஒன்று அங்குள்ள நகைக்கடையில் புகுந்து 4 மில்லியன் யூரோ மதிப்பு கொண்ட நடைகளை திருடிச் சென்றனர்.  கொள்ளைக்கு பின் தப்பியோடிய போது திருடப்பட்ட நகைகளில் சில சிதறி விழுந்தன. அதை போலிசார் பத்திரமாக மீட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker