Latestஇந்தியா

வெள்ளத்தில் சிக்கிய மக்கள்: முதுகை படிக்கட்டாக்கிய நபருக்கு சன்மானம்

திருவனந்தபுரம், செப்.11-கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது முதுகை படிக்கட்டாக்கிய நபருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் 324 பேர் பரிதாபமாக பலியாகினர்.                                                                                                                                                                                                                                                                              ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் மீட்டுக் கொண்டிருந்த போது ஓர் இடத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பெண்ணை மீட்க மீனவர்களின் உதவியை மீட்பு பணியாளர்கள் நாடினர்.
அதன்போது மீனவர்களுக்கு தேசிய ரப்பர் படகை மீட்பு படையினர் வழங்கினர்.

இந்நிலையில்,கே. பி ஜெய்ஷால் என்ற மீனவர் ஒரு பெண் ரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் அவரால் தானாக படகில் ஏற இயலாது என்பதை உணர்ந்து எதைப் பற்றியும் யோசிக்காமல் நீருக்குள் முட்டி போட்டு தனது முதுகையே படிக்கட்டாக மாற்றினார்.  அவர் மீது ஏறி அப்பெண் படகில் அமர்ந்து கொண்டார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் அவருக்கு பாராட்டுகள் குவித்தன.

இதையடுத்து கோழிக்கூட்டைச் சேர்ந்த மஹேந்திரா நிறுவனத்தின் விற்பனையாளர் சார்பில் அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கேரளா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி ராமச்சந்திரன் கார் சாவியை அவரிடத்தில் வழங்கினார். கார் பரிசு பெற்ற ஜெய்ஷால் கூறுகையில், எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தான் உதவினேன். அப்போது நான் என் கடமையை மட்டுமே செய்தேன் என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker