Latestமலேசியா

1எம்டிபி: விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படுமா இல்லையா?- வீ கா சியோங் கேள்வி

கோலாலம்பூர், செப்.11- பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில், 1எம்டிபி நிதி முறைக்கேடு குறித்த விசாரணையை மேற்கொள்ள தேசிய விசாரணை ஆணைக்குழு அமைக்கப் படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று என்று டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் கேள்வி எழுப்பினார். 

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்றும், 1எம்டிபி குறித்து முழுமையான, தெளிவான, வெளிப்படையான தகவல்களை தெரிந்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்றும், மசீச கட்சியின் துணைத் தலைவரான வீ கா சியோங் கூறினார். 

1எம்டிபி நிறுவனத்திற்கு சொந்தமான பணம் என்று நம்பப்படும் ரிம.46 மில்லியன் தொகையை அண்மையில் சிங்கப்பூர் மலேசியாவிற்கு திருப்பித் தர ஒப்புக் கொண்டது. அதுமட்டுமல்லாது, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக், தனக்கு சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தினர் தான் நன்கொடையை வழங்கினர் என்பதை நிரூபிக்கும் கடிதங்களை வெளியிட்டுள்ளார். 

இவ்வாறான திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரம் தொடர்பில் விசாரணை ஆணையக்குழு அமைக்கப் பட வேண்டும் என்று வீ கா சியோங் அறிவுறுத்தினார். 

இதனிடையில், 1எம்டிபி நிறுவனத்திலிருந்து காணாமல் போன பணம் அனைத்தும், அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படும் என்று கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியா மற்றும் அபு டாபி அரசாங்கங்கள் ஒப்பந்தக் கையொப்பம் செய்தன.
அந்த ஒப்பந்த கையொப்பத்தின் நிலை மற்றும் அது தொடர்பிலான முன்னேற்றம் குறித்தும் வீ கா சியோங் கேள்வி எழுப்பினார். 

“அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில தரப்பினர், 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து நேரிடையாக பணம் பெற்றுள்ளனர். அவர்கள் அந்தப் பணத்தை தங்களின் சொந்த வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளனர் என்று வால் ஸ்திரீட் ஜெர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.

“சவூதியின் பெட்ரோசவூதி உரிமையாளர்கள் மற்றும் தலைமை செயல்நிலை அதிகாரிகள் ஆகியோரும் அந்த வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“அவ்வாறு இருக்கும் பட்சத்தில், சம்பந்தப் பட்டவர்கள், ஜோ லோவுடன் இணைந்து, அத்தவறுகளை புரிந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

“அவர்கள் அனைவரையும், அரசாங்கம் விசாரணைக்கு உட்படுத்தி விட்டதா? அவர்கள் வெளிநாட்டவர்கள் என்ற காரணத்தால், அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்ற அனுமதியை அரசாங்கம் பெற்று விட்டதா?” என்று அவர் மேலும் வினவினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker