Latestசினிமா

அனுஷ்கா உடல் எடை கூடியது ஏன்? -ஜெயலலிதாவாக ஆகப் போகிறாராம்!

சென்னை, செப். 12- பாரதிராஜா இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இயக்குனர் விஜய், பிரியதர்ஷன் மற்றுப் பாரதிராஜா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் அல்லது நயன்தாரா நடிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டதாகத் கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க இருக்கிறாராம். பாரதிராஜாவுக்கு உறுதுணையாக அமீரும் வெற்றிமாறனும் பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை அண்மையில் உடல் எடை கூடிய நிலையில் அனுஷ்கா தோற்றமளிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.

அனுஷ்காவின் அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தற்போது அந்தக் கதாபாத்திரத்திற்காகத் தான் அவர் உடல் எடையை அதிகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker