Latestமலேசியா

அன்வாரை எதிர்த்து மஇகா வேட்பாளரா? அவசியமில்லை!- ஹாசான்

கோலாலம்பூர்,செப்.12- போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளர் தான் போட்டியிடுவார் என்பது நிச்சயம் இல்லை. அத்தொகுதியில் உண்மையில் யாரால் வாக்காளர்களைக் கவர முடியுமோ அவரைத்தான் நிற்க வைப்போம் என தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்துள்ளார்.

“பழைய வேட்பாளர்தான் போர்ட்டிக்சனில் இம்முறையும் போட்டியிட வேண்டும் என்பதில்லை. தகுதியான வேட்பாளரை அங்கே நிறுத்துவது முக்கியம்” என்றாரவர்.

இது தொடர்பில் விரைந்து கூட்டத்தை நடத்த வேண்டுமென அவர் தேசிய முன்னணியின் மத்திய செயலவையைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த இடைத்தேர்தலில் நேரடிப் போட்டி நிலவுவதற்கு வழிவிடுமாறு தேசிய முன்னணி பாஸ் கட்சியைக் கேட்டுக் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

போர்ட்டிக்சனில் எம்பியாக இருந்த டத்தோ டான்யால் பாலகோபால் அப்துல்லா ராஜினாமா செய்ததை அடுத்து அத்தொகுதி காலியாகியுள்ளது. அன்வார் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக அவர் தனது தொகுதியைக் காலி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker