Latestமலேசியா

அன்வாரை எதிர்த்து, லிங்கி சட்டமன்ற உறுப்பினரை நிறுத்துக! –கைரி கோரிக்கை

கோலாலம்பூர், செப்.12- போர்ட் டிக்சன் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், தேசிய முன்னணி வேட்பாளராக லிங்கி சட்டமன்ற உறுப்பினரான அப்துல் ரஹ்மான் முகமட் ரெட்ஸா தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் கருத்து தெரிவித்துள்ளார்.

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியின், ஐந்து சட்டமன்ற தொகுதிகளில், லிங்கியும் ஒரு முக்கிய தொகுதியாகும். இந்த லிங்கி சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி இதுவரை தோல்வியுற்றதில்லை.

லண்டனின் பொருளாதார பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றுள்ள அப்துல் ரஹ்மான், போர்ட் டிக்சன் தொகுதியில் போட்டியிட அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறார் என்று கைரி கூறினார்.

“இந்தத் தொகுதியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரை தேசிய முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கு தேவையான அனைத்து தகுதிகளையும் அப்துல் ரஹ்மான் கொண்டிருக்கிறார். அவர் இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

“அவர் அத்தொகுதி மக்களுக்கு பல சேவையை ஆற்றி உள்ளார்” என்று கைரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று சில தலைவர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

“நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசியல் குறித்து நன்கு அறிந்ததால், அத்தொகுதியில் அப்துல் ரஹ்மான் போட்டியிட வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்று கைரி கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker