Latestசினிமா

அமெரிக்காவில் துப்பாக்கியேந்தி காவல் பணியில் நடிகை பிரமிளா

லாஸ் ஏஞ்சல்ஸ், செப்.12- நடிப்புக்கு முழுக்கு போட்ட பின்னர் அமெரிக்காவில் 25 வருடம் பாதுகாவலராக பணி புரிந்தேன் என ‘அரங்கேற்றம்’ படத்தில் நடித்த நடிகை பிரமிளா தெரிவித்துள்ளார்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அரங்கேற்றம்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை பிரமிளா. அந்தப் படத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் வேடத்தில் நடித்தார். இந்த வேடம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பிரமிளாவின் நடிப்புக்காக நல்ல பெயர் கிடைத்தது.

பிரமிளா தொடர்ந்து கதாநாயகி, கவரச்சி வேடம், வில்லி என பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். பின்னர் இந்தியில் நடித்து வந்தார். அதன் பின் நடிப்பில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்து அமெரிக்காவில் தங்கிவிட்டார். அங்கே அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுவதாக செய்தி வந்தது.

அது குறித்து பிரமிளா கூறியதாவது:- அண்ணன் மாப்பிள்ளை பார்த்து நடத்திய திருமணம் இது. அவர் அமெரிக்கர் என்பதால் லாஸ் ஏஞ்சல்சிலேயே குடியேறி விட்டேன். . அமெரிக்கா டாலர் நோட்டுகள் அச்சடிக்கும் மத்திய அரசு நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக 25 வருடங்கள் வேலை பார்த்தேன்.

அச்சடித்த டாலர் நோட்டுகளை டிரக் மூலம் பாதுகாப்பாக வங்கிகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இதற்குப் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் பள்ளிகள் உண்டு. அதில் இரண்டு வருட பயிற்சி முடிந்து நுழைவுத் தேர்வில் தேர்வு பெற வேண்டும்.

துப்பாக்கி சுடுவதற்கும், டாலர் நோட்டுகளை எழுத்து செல்லும் டிரக்கை ஓட்டுவதற்கும், பயிற்சி அளித்தார்கள். அத்துடன் கிரிமினல் சட்டம் மற்றும் சிவில் சட்டம் படிக்க வேண்டும். இதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

கை நிறையச் சம்பளம், விதவிதமான அனுபவம் எனச் சந்தோஷமாக இருந்தது. இப்போது ஓய்று பெற்றுள்ளேன். வீட்டிக்குப் பின்னால் 2 ஏக்கரில் பழத்தோட்டம் போட்டிருக்கிறேன். வேட்டையாடுவதற்கு லைசென்ஸ் வைத்திருக்கிறேன். கை நிறைய ஓய்வூதியம், வேட்டை, விவசாயம், கணவருடன் காதல் என வாழ்க்கை சுகமாய் போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker