Latestஇந்தியா

எனக்குப் பிறந்தவள் தான் ‘மஹி’ -நடிகை ரேவதியின் ‘பகீர்’ உண்மை

திருவனந்தபுரம், செப் 12- நடிகை ரேவதி செயறகை கருத்தரிப்பு முறை மூலம் 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மண்வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேவதி. அதன் பின் தமிழ், மலையாளம், இந்தி என பல முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

புதிய முகம் படத்தில் நடித்த போது அப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவகாரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், செயற்கை கருத்தரிப்பு மூலம் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி ரேவதி கூறியதாவது:-

வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கடந்து வந்துள்ளேன். தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே செயற்கை கருத்தரிப்பு வழி குழந்தையைப் பெற்றெடுத்தேன். அவள் பெயர் மஹி,

அவளை நான் தத்தெடுத்து வளர்ப்பதாக வதந்தி பரவுகிறது. அதில் உண்மை இல்லை. அவளுக்கு தற்போது 5 வயது. அவளே என் சந்தோசம். அவளே என் உலகம். யாரிடமும் இது பற்றி நான் பேசியதில்லை என ரேவதி கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker