Latestமலேசியா

காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுக்கும் இயக்குனர்!

காஞ்சிபுரம், செப்.12- ‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர், இப்போது காஞ்சிபுரம் கோவிலில் பிச்சையெடுத்து வருகிறார் என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏறப்டுத்தி உள்ளது.

எம்ஜிஆர் நடித்த ‘நம் நாடு’ படத்தின் இயக்குனரான ஜம்புலிங்கத்தின் மகன் செந்தில்நாதன். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து உயர்ந்தவர். விஜயகாந்த்-ராதிகா ஆகியாரைக் கொண்ட ‘பூந்தோட்ட காவல்காரன்’ படம் மூலம் அறிமுகமானார்.

2009 ஆம் ஆண்டு “உன்னை நான்” என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளானார். படமும் வெளியாகவில்லை. கடன் நெருக்கடியால் சினிமாவை விட்டு விட்டு தொலைக்காட்சி பக்கம் வந்தார்.

டிவியில் தொடர்களை இயக்கியும் நடித்தும் வந்தார். அவர் நடித்து வந்த தொடர் ஒன்றிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதனால் கடும் விரக்தியில் இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது அவர், காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது.

தயாரிப்பாளர்களாக இருக்கும் அவருடைய நண்பர்கள் சிலர், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker