Latestமலேசியா

‘கிரேடல்’ CEO நஸ்ரின் கொலை: வளர்ப்பு மகன்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

ஷா ஆலாம்,செப்.12- ‘கிரேடல்’ நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி நஸ்ரின் ஹசான் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது வளர்ப்பு மகன்கள் இருவரின் 7 நாள் தடுப்புக் காவலை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட அவ்விரு பதின்ம வயதினரையும் உடனடியாக விடுவிக்குமாறு நீதிபதி டத்தோ அப்துல் ரஹ்மான் போலீசாரை உத்தரவிட்டார். நஸ்ரினின் வளர்ப்பு மகன்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஹிஷாம் தே போ தெய்க்கும், எல்.எஸ் லியோநர்ட்டும் அவ்விருவரையும் விடுவிக்குமாறு மனு சமர்ப்பித்ததை அடுத்து அப்துல் ரஹ்மான் அத்தீர்ப்பை அளித்தார்.

நஸ்ரின் கொலை வழக்கில் ஏன் அவரது வளர்ப்பு மகன்களை தடுத்து வைத்துள்ளனர் என்பதற்கு போலீசார் சரியான காரணத்தை சொல்லத் தவறியதால் தான் இத்தீர்ப்பை வழங்கியதாக அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு அந்த 14,16 வயது மகன்களை போலீசார் கைது செய்தனர்.

நஸ்ரின் அறையில் அவரது கைத்தொலைப்பேசி வெடித்து தீப்பிடித்ததால் அவர் தீயில் கருகி இறந்தார் என கருதப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடந்தது. பிரபல வர்த்தகராக விளங்கிய நஸ்ரினின் மரணம் வர்த்தக வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே, அவருடைய அறையில் நான்கு இடங்களில் பெட்ரோல் கறைகள் இருந்தது சோதனைக்கூட ஆய்வில் இருந்து தெரியவந்தது.

இந்த ஆய்வை சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை பிரிவு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படையில் குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் கொலை குற்ற விசாரணையை போலீசார் தொடங்கினார்கள்.

அவரது தலை, கட்டில் மற்றும் மெத்தை ஆகியவற்றுடன் அவரது கைத்தொலைப்பேசியிலும் பெட்ரோல் கறைகள் இருந்தது சோதனைக்கூட ஆய்வு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker