Latestமலேசியா

குட்டைப் பாவாடை கீழ் வீடியோ எடுத்த துணையமைச்சரின் உதவியாளருக்கு ஜாமீன்!

பெட்டாலிங் ஜெயா, செப்.12- கண் சோதனை செய்யும் கடை ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவரின் குட்டைப் பாவாடையை தனது கைத்தொலைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த, உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் அஸிஸ் ஜம்மானின் முன்னாள் உதவியாளர், நேற்று போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப் பட்டார்.

47 வயதான அந்த ஆடவர் நேற்றிரவு 10 மணிக்கு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார் என்றுசெந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஆர்.முனுசாமி கூறினார்.

தனது உதவியாளரின் தகாத செயல் சிசிடிவி காமிராவில் பதிவாகி, அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலானதை தொடர்ந்து, அஸிஸ் அந்த ஆடவரை உடனடியாக பணி நீக்கம் செய்தார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தனது உதவியாளரின் அச்செயலால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று செபாங்கார் நாடாளுமன்ற உறுப்பினரான அஸிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சம்பவத்தை தொடர்ந்து, ஶ்ரீ ஹர்த்தாமாஸ் பகுதியிலிருந்து அந்த ஆடவர் போலீசாரால் கைது செய்யப் பட்டார்.

அஸிஸின் கண்களை தாம் சோதனை செய்துக் கொண்டிருந்த போது, பின்புறம் அவரின் உதவியாளர் தனது குட்டைப் பாவாடைக்கு கீழ் தனது கைகளில் கைத்தொலைப்பேசியை வைத்துக் வீடியோ எடுத்தைத் தாம் பார்த்ததாக, பாதிக்கப் பட்ட பெண் கூறியுள்ளார்.

அவரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து, கடையில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி காமிராவை சோதனை செய்த போது, அந்த உதவியாளர் தனது குட்டைப் பாவாடைக்கு கீழ் கைத்தொலைபேசியை க் கொண்டு வீடியோ பதிவு செய்துள்ளார் என்பது தமக்கு தெரிய வந்ததாக அந்தப் பெண் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker