Latestமலேசியா

சலவைக் கடையில் பெண்ணிடம் கத்தி முனையில் கொள்ளை- (video)

சுங்கை பட்டாணி,செப்.12- தானியங்கி சலவைக் கடை ஒன்றில் துணி துவைக்கச் சென்ற பெண் ஒருவரிடம் பாராங் கத்தி ஏந்திய இரு ஆடவர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அச்சம்பசம் பண்டார் புத்ரி ஜெயாவில் நடந்ததாக கூறப்படுகிறது.

அந்த சலவைக் கடையில் ஒரு மலாய்க்காரப் பெண் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த இரு ஆடவர்கள் முதலில் அப்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பாராங் கத்தியை எடுத்து அந்தப் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து கைப்பேசி, பணப் பை, கைச் சங்கிலியைப் பறித்துள்ளனர்.

அச்சமயத்தில் மற்றோர் ஆடவன் பெண்ணின் தலைத் துணியை விலக்கி கழுத்துச் சங்கிலியையும் அபகரித்துள்ளான். பிறகு, அவ்விரு ஆடவர்களும் அங்கிருந்து தப்பித்தோடி விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில், போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக கோலா மூடா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்துள்ளார்.

samun di kedai Dobi Layan Diri

Sungai Petani, Kedah:Kes .. sbagai peringatan ianya boleh berlaku dimana-mana, bila-bila masa dan tidak mengira lokasi dobi mana. Jangan ingat siang selamat dan malam merbahaya.Kes berikut dikatakan berlaku di Bandar Puteri Jaya (BPJ)-Village Laundry sebelah kdai mkn D'sonata area Klinik 1 Malaysia.Kalau ikut time di CCTV kejadian sekitar jam 915-930pagi!vid : Info Kemalangan dan Bencana Malaysia FB

Posted by ROTIKAYA on Wednesday, 12 September 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker