Latestமலேசியா

சலவை இயந்திரத்தில் போட்டு பூனையை சாகடித்த அரக்கர்கள்!- (video)

கோம்பாக்,செப்.12- தாமான் கோம்பாக் ரியாவிலுள்ள ஒரு தானியங்கி சலவைக் கடையில் கர்ப்பமாக இருந்த பூனை ஒன்றை துணியை உலர வைக்கும் கருவியில் போட்டு சாகடித்த இரு இளைஞர்களை என்னவென்று சொல்வது? அரக்கர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு அந்த சலவைக் கடைக்கு வந்த அவ்விரு இளைஞர்களும் தங்களின் துணிமணிகளைத் துவைத்து விட்டு, தாங்கள் உடன் கொண்டு வந்த பூனையை உலர வைக்கும் இயந்திரத்தில் போட்டு “ஆன்’ பட்டனை தட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். மறுநாள் காலை அந்த கடைக்கு வந்த ஒருவர் அந்த பூனை இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு கடை உரிமையாளருக்கு தகவல் அளித்திருக்கிறார். போலீசும் இது தொடர்பில் புகாரை பெற்றிருப்பதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் சாம்சோர் மாரோப் தெரிவித்தார்.

அந்த இளைஞர்கள் செய்த அக்கொடூரச் செயல் கடையின் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. கடை உரிமையாளர் இச்சம்பவம் குறித்து மலேசிய விலங்குகள் சங்கத்திடமும், கால்நடை துறையிடமும் புகார் அளித்திருக்கிறார்.

2015-ஆம் ஆண்டு விலங்குகள் நலன் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Zalim.. Dua pemuda memasukkan kucing ke dalam mesin pengering bersuhu tinggi di sebuah Kedai Dobi di Taman Gombak Ria.

Posted by Taman Sri Gombak on Tuesday, 11 September 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker