Latestமலேசியா

சாலையில் ‘ஹோன்’ அடித்த ஆடவருக்கு கத்திக் குத்து!- (video)

ஜொகூர் பாரு,செப்.12- சாலையில் ‘ஹோன்’ அடித்ததற்காக கார் ஓட்டுநர் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜாலான் டத்தோ அப்துல்லா தாஹிரில் நிகழ்ந்தது.

அதிகாலை 4 மணியளவில் ஜாலான் டத்தோ அப்துல்லா தாஹிர் சாலை வழியாகச் சென்ற 40 வயது ஆடவர் தனது காரை வழிமறிக்கும் விதமாக மெர்செடிஸ் கார் ஒன்று சாலைக்குள் திடீரென புகுந்ததால் அவர் ‘ஹோன்’ அடித்திருக்கிறார். அவர் ஹோன் அடித்ததால் அந்த மெர்செடிஸ் காரில் இருந்து இறங்கி சினத்துடன் வந்த இரு ஆடவர்கள் அந்த ஆடவரை சரமாரியாக கத்தியில் குத்தித் தாக்கியிருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட ஆடவருக்கு வயிற்றுப்பகுதி, தலைப்பகுதி மற்றும் சில உடல்பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மக்கள் ஜொகூர் பாரு மாவட்ட போலீசாரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குற்றவியல் சட்டம் செக்சன் 324-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Kene tikam gara2 hon Johor

Posted by Alai Sutida Resources on Wednesday, 12 September 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker