
மும்பை, செப்.12- கடந்த 1995-இல் பிரபல இந்தி நடிகையும் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகியுமான சுஷ்மிதா சென் கையால் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற செல்ஸி ஸ்மித் என்ற அமெரிக்க அழகி காலமானார்.
1995 இல் அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் வென்றார். அவர் தற்போது 45 வயதிலேயே மரணமடைந்திருப்பது பலருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
செல்ஸி ஸ்மித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் நீண்ட காலம் போராடி, தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். செல்ஸி ஸ்மித் மறைவுக்கு டுவிட்டரில் சுஷ்மிதா சென் நீண்ட உருக்கமான இரங்கல் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.