Latestஇந்தியா

டிவி நேரடி நிகழ்ச்சி: பிரபல எழுத்தாளர் உயிர்நீத்த அதிர்ச்சி! -(VIDEO)

ஜம்மு, செப் 12- காஷ்மூர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும் பிரபலமான பெண் எழுத்தாளருமான பேராசிரியர் ரீட்டா ஜிதேந்திரா, துர்தார்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போதே உயிர் இழந்தார்.

எழுத்தாளர் டாக்டர் ரீட்டா ஜிதேந்திரா, ஸ்ரீநகரில் உள்ள துர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பான “குட்மானிங் ஜம்மு” காஷ்மீர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நன்றாக உரையாடிக் கொண்டிருந்து ரீட்டா, திடீர் என்று தனது இருக்கையின் பின்னால் சாய்ந்து மேலே பார்த்த படி மூச்சு விடத் திணறினார்..

மூச்சு திணறல் ஏற்பட்ட வேகத்தில் அவர் மூச்சு பேச்சு இல்லாமல் ஆகிவிட்டார். இச்சம்பவம் காலை 8.30 மணியளவில் நடந்தது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கே அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

மிகவும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியோடு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், பிணமாக திரும்பி வீட்டுக்கு வந்தது கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker