Latestமலேசியா

‘நான் என் தொகுதி மக்களை கைவிட மாட்டேன்!’ –டன்யால் அப்துல்லா

போர்ட்டிக்சன், செப்.12- பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வழி விடும் வகையில், போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டன்யால் பாலகோபால் அப்துல்லா தனது தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளார்.

தான் அத்தொகுதியை அன்வாருக்கு விட்டுக் கொடுத்த போதிலும், தனது மக்களுக்குத் தாம் தொடர்ந்து சேவையாற்றவிருப்பதாக டன்யால் தெரிவித்தார். “அன்வார் போர்ட்டிக்‌சன் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று, நாட்டின் 8-ஆவது பிரதமராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

“நான் எனது தொகுதியை உடனடியாக காலி செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை நான் நாடாளுமன்ற சபா நாயகருக்கு அனுப்பி வைத்து விட்டேன்” என்று டன்யால் சொன்னார்.

“நான் சந்தோஷத்தில் எனது தொகுதியை காலி செய்யவில்லை. நான் போர்ட் டிக்சன் தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவேன். அன்வாருக்கு நான் இத்தொகுதியை விட்டுக் கொடுக்கிறேன் என்று கூறிய போது, அவர் அதனை ஏற்றுக் கொள்ள சங்கடப் பட்டார்.

“உங்களின் ஆதரவு இருந்தால் போதும், நான் மக்களுக்கு எனது சேவையை வழங்குவேன் என்று நான் கூறிய பின்னர், அவர் அதை ஏற்றுக் கொண்டார். நான் என் மக்களை கைவிடவில்லை, அவர்களை புறக்கணிக்கவில்லை. நான் அன்வாருடன் இணைந்து மக்களுக்குத் தேவையான சேவையை வழங்குவேன்” என்று டன்யால் கூறினார்.

இதனிடையில், அத்தொகுதியை விட்டுக் கொடுப்பதற்காக ஈடாக டன்யால் பாலகோபாலுக்கு எதுவும் வழங்கப் படவில்லை என்று பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் சைஃபுடின் கூறினார்.

“பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள் இது குறித்தெல்லாம் கவலைக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதுவே எங்கள் கட்சியின் சிறப்புத் தன்மை.

“ரபிஸி ரம்லி தனது பண்டான் தொகுதியை டத்தோஶ்ரீ வான் அஸீஸாவிற்கு விட்டுக் கொடுத்த போது, அதற்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளவில்லை. அவர் இப்போது ஏழை மனிதர் தான்” என்று சைஃபுடின் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker