Latestமலேசியா

ரிங்கிட் மதிப்பு சரிகிறதே; யார் குற்றம்?- நஜிப்

கோலாலம்பூர்,செப்.12- “14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் என் மீதான குற்றச்சாட்டுக்களில் நாட்டின் ரிங்கிட் மதிப்பு குறைந்ததும் ஒன்று. ரிங்கிட் மதிப்பு குறைந்ததைச் சுட்டிக் காட்டி என்னை பல முறை தாக்கிப் பேசினார்கள். நாடு என்னால் திவால் ஆகப் போகிறது என்றார்கள். நான் ஆட்சிவிட்டுச் சென்று 4 மாதங்களாகிவிட்டது. இப்போதும் ரிங்கிட் மதிப்பு குறைந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கும் நான் தான் காரணமா?” என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் ரிங்கிட் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும் உலகச் சந்தையில் எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டது. எண்ணெய் விலை ஏற்றம் கண்டால் ரிங்கிட்டின் மதிப்பும் வலுவாக இருக்கும். இல்லையேல், சரியும். இது யாவரும் அறிந்த ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.

“நான் புதிதாக நிதி அமைச்சராக பதவி வகித்தபோதுகூட ரிங்கிட் மதிப்பு நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பலவீனமாக இருந்தது. அப்போது பிரதமராக இருந்த துன் மகாதீர் அவர் 1998-ஆம் ஆண்டில் செய்தது போன்றே என்னை ரிங்கிட்டை நிலைநிறுத்தச் சொன்னார். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.”

இப்போது தான் ஆட்சியில் இல்லை. துன் மகாதீர் பிரதமராக இருக்கிறார். நாளுக்கு நாள் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பக்காத்தான் ஹராப்பான் அரசு என்ன செய்யப் போகிறது என நஜிப் கேள்விக் கேட்டுள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தை சரிப்படுத்துவதற்கு சரியான திட்டத்தை பக்காத்தான் அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker