Latestமலேசியா

நேவி பயிற்சி மாணவர் சூசைமாணிக்கம் மரணம்: சவப்பரிசோதனை வெளியிடப்படவில்லை

கோலாலம்பூர்,செப்.12- லுமுட் கடற்படைப் பயிற்சியில் இருந்தபோது உயிரிழந்த ஜே.சூசைமாணிக்கத்தின் சவப்பரிசோதனை அறிக்கையை அவரது குடும்பத்திடம் காண்பித்து விட்டதாக பேராக் சுகாதாரத் துறை கூறுவது உண்மையல்ல. இதுவரை அத்துறை சூசைமாணிக்கத்தின் சவப்பரிசோதனை அறிக்கையை வெளியிடவே இல்லையென வழக்கறிஞர்கள் சாடியுள்ளனர்.

சுகாதார துறையும், ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனையும் அவ்வாறு கூறியிருப்பது அடிப்படையற்றதென வழக்கறிஞர்களான ஸாயிட் மாலிக்கும் மஹாஜோத் சிங்கும் குறிப்பிட்டுள்ளனர். அத்தரப்புக்கள் தொடக்கத்தில் வெளியிட்டது முழுமையான சவப்பரிசோதனை அறிக்கை கிடையாது. ஆய்வுக்கூட முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இறுதியான, உறுதியான சவப்பரிசோதனை அறிக்கை சூசை மாணிக்கத்தின் குடும்பத்திடம் ஒருபோதும் வழங்கப்படவில்லை” என அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

மேலும், சட்டப்படி சூசைமாணிக்கத்தின் சவப்பரிசோதனை அறிக்கையி பிரதி அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உரிமையை அவர்கள் விளக்கினர்.

மே 19-ஆம் தேதியன்று, நெஞ்சு வலிப்பதாகவும், சுவாசிக்க முடியவில்லை என்று சொல்லியும் சூசைமாணிக்கம் பயிற்சியில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். பயிற்சி முடிந்து மயங்கி விழுந்த சூசைமாணிக்கம் உயிரிழந்துவிட்டதாக பிற்பகல் மணி 1.45-க்கு மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

மறுநாள் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் சோதனையில், சூசைமாணிக்கத்தின் நுரையீரலில் நீர் கோர்த்ததால் அவர் உயிரிழந்திருக்கிறார் என்று தெரியவந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹானிப் ஒத்மான் தெரிவித்தார் என்பது குறிப்புடத்தக்கது.

சூசைமாணிக்கத்தின் மரணத்தின் பின்னணியில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தில், தங்களுக்கு சரியான விளக்கம் வேண்டும் என சூசைமாணிக்கத்தின் குடும்பத்தினரும், அவர்களின் வழக்கறிஞர்களும் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
ஆனால் இதுவரையில், உண்மை மறைக்கப்பட்டு வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker