Latestமலேசியா

பூச்சோங்கில் வீட்டுக் கழிவறை தொட்டிக்குள் மலைப்பாம்பு!

பூச்சோங், செப்.12- இங்கு பூச்சோங் பெர்டானாவிலுள்ள தனது வீட்டின் கழிவறையை உபயோகிக்கச் சென்ற பெண் ஒருவர், கழிவறை தொட்டிக்குள் இருந்து மலைப்பாம்பு ஒன்று தலையை வெளியே நீட்டியதை கண்டு உறைந்து போனார்.

அச்சம்பவம் குறித்து இன்று காலை 6.45 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தாங்கள் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாக மலேசிய பொது பாதுகாப்பு படை (ஏ.பி.எம்) புத்ராஜெயா பிரிவின் பேச்சாளர் மேஜர் அகமட் ஜுனைடி கூறினார்.

“மூன்று ஏ.பி.எம் அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்ற போது, அந்த மலைப்பாம்பு, அந்தக் கழிவறை தொட்டியிலிருந்து வெளியேறி, அருகிலிருந்த குழாயை சுற்றிக் கொண்டிருந்தது” என்று அவர் விவரித்தார்.

சில நிமிடங்களில், அந்த மலைப்பாம்பினை அந்த அதிகாரிகள் அங்கிருந்து அகற்றியதாக அவர் தெரிவித்தார்.

“வானிலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால், அந்த மலைப்பாம்பு, தனது இடத்தை விட்டு அருகிலிருந்த வீட்டிற்கு இடம் பெயர்ந்திருக்கக் கூடும்” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker