Latestமலேசியா

போர்ட்டிக்சனில் இடைத்தேர்தல்; அன்வார் போட்டி உறுதி!

கோலாலம்பூர்,செப்.11- பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என இன்று அதிகாரப்பூர்வமாக பிகேஆர் கட்சி அறிவித்தது.

பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ சைப்புடின் நசூதியோன் இஸ்மாயில் அறிவித்தார்.

அத்தொகுதியின் நடப்பு எம்பியான டத்தோ டன்யால் பாலகோபால் அப்துல்லா தனது தொகுதியை அன்வாருக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இதற்காக அவர் தம்முடைய ராஜினாமா கடிதத்தை சபா நாயகரிடம் சமர்ப்பித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின்போது பிகேஆர் சார்பில் போட்டியிட்ட டன்யால் பாலகோபால்
17,710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

இவரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளர் டத்தோ வி.எஸ் மோகன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடட்தக்கது.

டன்யால் பாலகோபால் ராஜினாமா செய்ததால், அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், அன்வார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker