Latestமலேசியா

போர்ட்டிக்சன் எம்.பி. டேனியல் விலகலா? மூத்த படை வீரர்கள் சங்கம் எதிர்ப்பு!

கோலாலம்பூர், செப்.12- போர்ட்டிக்சன் தொகுதி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா, அத்தொகுதியை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராமிற்காக கட்டாயத்தின் பேரில் விட்டுக் கொடுக்க நேர்ந்தால், அதனால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று தேசிய தேசப் பற்றாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இராணுவத்தில் பணிபுரிந்தவரான டேனியல் அப்துல்லா, கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தலின் போது போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிகண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் டேனியல் வென்றது குறித்து மூத்த முன்னாள் இராணுவ வீரர்கள் அமைப்பு பெரிதும் வரவேற்றது. ஏனெனில் அவர் ஒரு முதல்நிலை அட்மிரல் அந்தஸ்தை கொண்டவர் என்பதால் அவரைத் தங்களின் பிரதிநிதியாகவே தாங்கள் பார்த்ததாக தேசப் பற்றாளர்கள் சங்கத் தலைவர் பிரிக்கேடியர் ஜெனரல் (ஓய்வு) முகம்மட் அர்ஷாட் ராஜி சொன்னார்.

இராணுவத்தில் பணிபுரிந்த மூத்தவர்கள், நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதை, பல்லாயிரக் கணக்கான மூத்த படை வீரர்கள் பெரிதும் ஆதரித்து வந்துள்ளனர் என்பதை பிகேஆர் கட்சியின் தலைமைத்துவம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அந்தத் தொகுதியில் அன்வாருக்காக  இடைத்தேர்தல் நடத்தப்படும் நோக்கில்,  டேனியல் அப்துல்லா கட்டாயமாக விலகுகிறார் என்றால், பிகேஆர் கட்சி, மூத்த படை வீரர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்றே கருதப்படும் என்று அர்ஷாத் ராஜி சொன்னார்.

டேனியல் அப்துல்லா தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருந்து வரவேண்டும். இராணுவத்தினரின் பிரச்னைகளை பேசுவதற்கும் அவர்களின் நலன்களை பேணுவதற்கும் அவரைப் போன்ற இராணுவ அனுபவம் உள்ளவர்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker