Latestமலேசியா

போர்ட்டிக்சன் தொகுதியை மஇகா விட்டுக் கொடுக்கும்- மஇகா

நெகிரி செம்பிலான்,செப்.12- தேசிய முன்னணி கேட்டுக்கொண்டால் வரும் போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தேசிய முன்னணியின் இதர உறுப்பு கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என நெகிரி செம்பிலான் மஇகா அறிவித்துள்ளது.

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழக்கமாக மஇகாவுக்குத்தான் வழங்கப்படும். இருப்பினும் இம்முறை அந்த வாய்ப்பு அம்னோவுக்கு விட்டுக் கொடுக்கப்படலாம் என அம்மாநில மஇகா தலைவர் டத்தோ எல்.மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

“டத்தோஶ்ரீ அன்வார் போர்ட்டிக்சனில் போட்டியிடுவதாக திடீரென இன்று அறிவித்துள்ளார். அதனால், இது தொடர்பில் தேசிய முன்னணி இன்னும் முடிவு செய்யவில்லை. தேசிய முன்னணி தலைமைத்துவத்தின் எந்த முடிவையும் மஇகா ஏற்றுக்கொள்ளும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகுதியான வேட்பாளரே அன்வாருக்கு எதிராக நிறுத்தப்படுவார் என்று தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசான் இன்று கூறியிருந்தார். அதனை மஇகா வரவேற்பதாகவும் மாணிக்கம் தெரிவித்தார். யார் நிற்கிறார் என்பது முக்கியமல்ல; தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கியம் என்றாரவர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker