Latestமலேசியா

போலிச் செய்தி தடுப்புச் சட்டம் நீக்கம்; செனட் சபை நிராகரிப்பு!

கோலாலம்பூர், செப்.12- 2018-ஆம் ஆண்டின் போலிச் செய்தி தடுப்புச் சட்டத்தை அகற்றும் சட்டத்தை நாடாளுமன்றம் இன்று நிராகரித்தது. போலிச் செய்தி தடுப்புச் சட்டத்தை அகற்றும் சட்டத்தை ஏற்றுக் கொள்ள 28 செனட்டர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

21 செனட்டர்கள் அச்சட்டத்தை அகற்றப்படுவதற்கான சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மூன்று செனட்டர்கள் இதில் வாக்களிக்கவில்லை என்று செனட் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

தேசிய முன்னணி அரசாங்கத்தால் அமல்படுத்தப் பட்ட அச்சட்டம், அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் துறையின் துணை அமைச்சரான முகமட் ஹனிஃபா மைடின் இரண்டாவது முறையாக கேட்டுக் கொண்டார்.

செனட்டர் கைரூல் அஸ்வான் ஹரூண் அதனை நிராகரிக்க வாக்களிப்பு முறை செயல்படுத்தப் பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 16-ஆம் தேதியன்று, போலிச் செய்தி தடுப்புச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker