Latestஉலகம்

‘மனித உடல்’ அருங்காட்சியகம்; மீண்டும் திறக்க நீதிமன்றம் உத்தரவு!

பெர்லின், செப்.12- ஜெர்மனியின் பெர்லின் நகரில் இயங்கிய பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் அருங்காட்சியகத்தை மீண்டும் திறப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

“போடி வேல்ஸ்” என்ற அருங்காட்சியகம் மக்களின் பார்வைக்காக 2015 ஆம் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் வைக்கப்பட்டிருந்தன.

மனித உடல்கள் பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையிலும் அதன் உடல் தோற்றத்தில் அமைந்திருந்த நிலையில், மனிதனின் உடல் தோற்றத்தை ஒழுங்காக பதப்படுத்தி வைக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இந்த அருங்காட்சியகத்தை மூட வேண்டும் என கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது. இதன் உரிமையாளர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்தார். இது குறித்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் உடலினுள் போதிய திரவங்கள் வைக்கப்பட்டு முறையாக மனித உடல்களை பார்வைக்கு வைக்கலாம் என்ற அறிவுறுத்தலோடு அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker