Latestமலேசியா

மனைவியின் இறுதிச் சடங்கு: நவாசுக்கு நீதிமன்றம் அனுமதி!

இஸ்லாமாபாத், செப்.12- மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு நீதிமன்றம் ‘பரோல்’ அனுமதி வழங்கியது.

‘பனாமா கேட்’ ஊழலில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

2014ஆம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்று வரும் பேகம் குல்சூமின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்தது. இந்நிலையில் அவர் பாகிஸ்தான் தங்கி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டது.

தமது மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ‘பரோல்’ கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார் நவாஸ். அவரது ‘பரோல்’ மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர அனுமதி கொடுக்க உத்தரவிட்டது.

அதே போன்று நவாஸின் மகள் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவருக்கும் நீதிமன்றம் பரோல் வழங்கியது. இதையடுத்து ராவல் பிண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாஸ் ஷரீப், லாகூர் வந்தடைந்தார். அங்கு அவரது மனைவியின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker